பதிவு செய்த நாள்
25
ஏப்
2022
03:04
மாமல்லபுரம் : திருவிடந்தை, நித்திய கல்யாண பெருமாள் கோவிலில், தெப்போற்சவம், இன்று நடக்கிறது. மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில், ஹிந்து சமய அறநிலையத்துறை, நித்திய கல்யாண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், சித்திரை பிரம்மோற்சவ விழா, கடந்த 16ம் தேதி கொடியேற்ற நிகழ்வுடன் துவங்கியது. தினமும், காலை, இரவு, உற்சவங்கள் நடைபெற்று, சுவாமி வீதியுலா செல்கிறார்.கடந்த 20ம் தேதி, கருட வாகன சேவை, 22ம் தேதி திருத்தேர் என, உற்சவங்கள் நடைபெற்றன. இறுதி உற்சவமாக, இன்று காலை 9:30 - 11:30 மணிக்கு, திருமஞ்சனம், பகல் 12:00 - 1:30 மணிக்கு, துவாதச ஆராதனம் மற்றும் புஷ்பயாகம் நடைபெறுகின்றன. இரவு 9:30 - 10:30 மணிக்கு, தெப்போற்சவம் நடைபெறுகிறது.