பதிவு செய்த நாள்
25
ஏப்
2022
03:04
திருக்கோஷ்டியூர்: திருப்புத்துார் அருகே கண்டரமாணிக்கம் மாணிக்கநாச்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நாளை தேரோட்டம் நடைபெறும்.
இக்கோயிலில் சித்திரைத் திருவிழா பத்துநாட்கள் நடைபெறும். ஏப்.,19 ல்காப்புக் கட்டி விழா துவங்கியது. இரவில் பூதகி வாகனத்தில் அம்பாள் எழுந்தருளினார். தொடர்ந்து தினசரி காலை 10:30 மணிக்கு கேடகத்தில் அம்பாள் எழுந்தருளலும், இரவில் சிம்மம், அன்னம், காமதேனு, யானை, ரிஷப வாகனத்தில் அம்பாள் திருவீதி உலாவும் நடந்தது. இன்று குதிரை வாகனத்தில் அம்பாள் வீதி வலம் வருவார். நாளை காலை 8:00 மணி அளவில் மகா கணபதி, மாணிக்கநாச்சியம்மன் ஆகியோர் தேரில் எழுந்தருளுகின்றனர். தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் நடைபெறும். மாலை 4:30 மணிக்கு குழந்தைகள் தொட்டில் கட்டுதல், மாலை 6:30 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நடைபெறும். தொடர்ந்து தெற்குப்பட்டு மூலஸ்தானம் சென்றடையும். ஏப்.,27 ல் தெற்குப்பட்டு மூலஸ்தானத்திற்கு பால்குடம் எடுத்தலும், மூலஸ்தானத்திலிருந்து தேர் திரும்பி வருதலும், கற்பகவிருட்ச வாகனத்தில் அம்பாள் எழுந்தருளலும் நடைபெறும். பத்தாம் திருநாளில் காலையில் மஞ்சுவிரட்டும், புஷ்ப பல்லக்கிலும் அம்பாள் எழுந்தருளலும் நடைபெறும்.