கொடைக்கானல்: கொடைக்கானல் சத்யசாய் சுருதியில் ஸ்ரீ சத்ய சாய்பாபா ஆராதனை மஹோத்ஸவம் நடந்தது. இதில் நாராயண சேவை, வஸ்திரதானம், குதிரைகளுக்கு உணவும், உரிமையாளர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. கொடைக்கானல் நகராட்சிக்கு சத்ய சாய் சேவா நிறுவனங்கள் சார்பாக தண்ணீர் டேங்கர் லாரி அர்ப்பணிக்கப்பட்டது. சத்யசாய் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்களின் இசை நிகழ்ச்சி நடந்தது. மாநில தலைவர் சுரேஷ், மாநில உப தலைவர் விஜயகிருஷ்ணன், கொடைக்கானல் சமிதி கன்வீனர் சாந்தா சதீஷ், நகராட்சித் தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன் கலந்து கொண்டனர். ஏராளமான பொதுமக்கள் விழாவில் கலந்துகொண்டனர். முன்னதாக அன்னதானம் நடந்தது.