புதுச்சேரி: ஆருத்ரா நகர் ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் செடல் உற்சவ திருவிழா நாளை நடக்கிறது. புதுச்சேரி கவுண்டன்பாளையம் அம்பாள் நகர்-ஆருத்ரா நகர் அன்னை ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் செடல் உற்சவ திருவிழா கடந்த 18ம் தேதி துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு, அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இன்று மாலை 4 மணிக்கு அம்மனுக்கு ஊரனிப் பொங்கல் நடக்கிறது. முக்கிய விழாவான செடல் திருவிழா நாளை 27ம் தேதி நடக்கிறது. காலை 5 மணிக்கு அம்மனுக்கு பால்குட அபிஷேக ஆராதனையும், காலை 7 மணிக்கு கிழக்கு குளக்கரையில் இருந்து சக்தி கரம் ஜோடித்து வீதியுலா நடக்கிறது. பகல் 12 மணிக்கு சாகை வார்த்தலும், மாலை 4 மணிக்கு "செடல் உற்சவமும் நடக்கிறது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு கும்பம் கொட்டுதலும், இரவு 9 மணிக்கு மின் அலங்காரத்துடன் அம்மன் வீதியுலாவும் நடக்கிறது.