கடலாடி: கடலாடி முத்தாலம்மன் கோயிலில் மாங்கல்ய பூஜை நடந்தது. வருடம் ஒருமுறை நடக்கும் இவ்விழாவில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பூஜையில் பங்கேற்றனர். மூலவர் முத்தாலம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பூஜகர் கூரியைய்யா பூஜைகள் செய்தார். மாங்கல்ய பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு தாம்பூலப் பிரசாதம் வழங்கப்பட்டது. குங்கும அர்ச்சனை, நாமாவளி, பாராயணம், லட்சுமி ஸ்தோத்திரம் உள்ளிட்டவைகள் நடந்தது. கோயில் தலைவர் ராஜேந்திரன், சின்னத்தம்பி, மகேஸ்வரி, சாந்தி மற்றும் நன்குடி வெள்ளாளர் உறவின்முறையினர் செய்திருந்தனர். அன்னதானம் நடந்தது.