விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது.விக்கிரவாண்டி, புவனேஸ்வரி உடனுறை புவனேஸ்வரர் கோவில், சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு அபிேஷக, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. பூஜைகளை ரவிச்சந்திரன் குருக்கள் செய்திருந்தார்.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் குமாரசாமி, ரமேஷ், ரவி ஆகியோர் செய்தனர். ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.