பதிவு செய்த நாள்
28
ஏப்
2022
08:04
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் வடக்கூரில் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளிஅம்மன் கோயில் பொங்கல் மற்றும் பூச்சொரிதல் விழா நடைபெற உள்ளது. இதனையொட்டி கோயிலில் காப்புகட்டும் நிகழ்ச்சி நடந்தது.தலைவர் சிவக்குமார், செயலாளர் பெருமாள், உதவித்தலைவர் வயணப்பெருமாள், பொருளாளர் அசோகன், உதவி செயலாளர் செல்வகுமார் தலைமை வகித்தனர். விநாயகர்,அம்மன், கொடிமரத்திற்கு காப்பு கட்டப்பட்டது. மூலவரான பத்திரகாளி அம்மனுக்கு பால், சந்தனம், பன்னீர் உட்பட 21 வகையான அபிஷேகங்கள், சிறப்புபூஜை நடந்தது.பின்பு பால்குடம் ,அக்னிச்சட்டி எடுக்கும் பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருக்கத் தொடங்கினார். தினந்தோறும் மாலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடைபெறும்.வருகின்ற மே 3ந் தேதி பால்குடம் ,அக்னிச்சட்டி ஊர்வலம், மே 4ந் தேதி பொங்கல் வைத்தல், முளைப்பாரி ஊர்வலம்,மஞ்சள் நீராட்டு நடைபெறும்.