தென்காசி : தென்காசி ஷீரடி சாய்பாபா கோயிலில் இன்று (26ம் தேதி) சிறப்பு பூஜை வழிபாடு நடக்கிறது. தென்காசி - ஆய்க்குடி சாலையில் பாலிடெக்னிக் கல்லூரி பஸ் ஸ்டாப் அருகேயுள்ள ஷீரடி சாய்பாபா கோயிலில் இன்று (26ம் தேதி) சிறப்பு அபிஷக அலங்கார தீபாராதனை நடக்கிறது. மாலை 6 மணிக்கு சிறப்பு ஆராத்தியும், சிறப்பு வழிபாடுகளும் நடக்கிறது. இரவு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை சுப்புலட்சுமி துரைச்சாமி அறக்கட்டளையினர் மற்றும் வக்கீல் ரவிசங்கர் செய்து வருகின்றனர்.