வெள்ளகோவில்: வெள்ளகோவில் சோழீஸ்வரசுவாமி கோவில் நேற்று மாலை நந்திஎம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. சோழீஸ்வரர், மற்றும் நந்திஎம்பெருமானுக்கு 16 திரவியங்கள் அடங்கிய அபிஷேகம் நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடந்தது.பக்தர்கள், பெண்கள் ஏராளமானோர் பூஜையில் கலந்து கொண்டனர்.பிரசாதம் வழங்கப்பட்டது.