ஸ்ரீவை., கள்ளபிரான் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஏப் 2022 08:04
ஸ்ரீவைகுண்டம் : ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் உற்சாகமாக தேரை வடம் பிடித்து இழுத்தனர்.துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் கள்ளபிரான் கோவில் உள்ளது. இங்கு சித்திரை திருவிழா கடந்த 21ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை 8.30 மணிக்கு துவங்கியது. சுற்றியுள்ள பல கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தேர் வடம் பிடித்து இழுத்தனர்.பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி., வெங்கடேசன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.