பழங்கால நடுகல், நெடுங்கல் திண்டுக்கல்லில் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஏப் 2022 08:04
போடி : திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே, கி.பி., 15 - 16ம் நுாற்றாண்டைச் சேர்ந்த நடுகல், நெடுங்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.போடி சி.பி.ஏ., கல்லுாரி தொல்பொருள் ஆராய்ச்சி பேராசிரியர் மாணிக்கராஜ் கூறியதாவது:திண்டுக்கல் அருகே ராகலாபுரத்தில் உள்ள குளக்கரையில் கி.பி., 15 - 16ம் நுாற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இந்தக் கல்லில் வீரன் ஒருவன், உடலை இரண்டு வளைவுகளாக வளைத்து நிற்கும் தோற்றத்தில் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.பண்டைய காலத்தில் ஒரு ஊரின் மீது படையெடுத்துச் செல்லும் போது, முதலில் அந்த ஊரின் நீர் நிலைகள், விளைநிலங்களை அழித்துஉள்ளனர்.அதனால் குளத்தையும், நீரையும் பாதுகாக்கும் நோக்கில் நடந்த சண்டையில் வீரமரணம் அடைந்த வீரனாக அவன் இருக்க வேண்டும்.அதுபோல நெடுங்கல் ஒன்றும் கண்டு எடுக்கப்பட்டுள்ளது.
வரலாற்றுக்கு முந்தைய காலத்து மக்களில், இறந்தவருடன் தொடர்புடைய ஈம நினைவுச் சின்னமாக இந்த நெடுங்கல் கருதப்படுகிறது.கோபால்பட்டி அருகே கள்ளுக்கடை மேடு என்ற இடத்தில் இது கண்டு பிடிக்கப்பட்டது. இது, திண்டுக்கல் மாவட்டத்தில் மிக உயரமான நெடுங்கல் என்ற சிறப்பை பெற்றுஉள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.