வாலாஜாபாத்: காஞ்சிபுரம் அடுத்த, முத்தியால்பேட்டை கிராமத்தில், பொட்டி சுவாமி என, அழைக்கப்படும் பிரம்மானந்த சுவாமிகள் கோவில் உள்ளது.
இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம், பிரம்மானந்த சுவாமி குருபூஜை விழா நடக்கும்.நடப்பாண்டு, 107வது ஆண்டு குரு பூஜை விழாவை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. தொடர்ந்து, மலர் அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முத்தியால்பேட்டை நடுநிலைப் பள்ளி வளாகத்தில், அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, பொட்டி சுவாமியை வழிபட்டு சென்றனர்.