Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆதி ஈஸ்வரன் கோயிலில் மண்டல பூஜை மகா மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா மகா மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாடுதுறை அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் அமுது படையல் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மயிலாடுதுறை அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் அமுது படையல் விழா

பதிவு செய்த நாள்

02 மே
2022
08:05

மயிலாடுதுறை: மயிலாடுதுறை  அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் 67-ஆம் ஆண்டு அமுது படையல் விழா நடைபெற்றது. சிறுத்தொண்டர் இறைவனுக்கு சீராளன் பிள்ளைக்கறி அமுது படைக்கும் ஐதீகத் திருவிழாவில் ஏராளமான பெண்கள் குழந்தைப்பேறு வேண்டி பிரசாதம் பெற்று உண்டு, வழிபாடு மேற்கொண்டனர்.

சிவபக்தரான சிறுத்தொண்டரின் பக்தியை சோதிக்க அவரிடம் சிவபெருமான் பிள்ளைக்கறி கேட்டதாகவும், அதன்படி சிறுத்தொண்டரும் இறைவனுக்கு  பிள்ளைக்கறி அமுது படைத்ததாகவும் ஐதீகம். இந்த ஐதீகத்தை நினைவுகூறும் வகையில் மயிலாடுதுறை கூறைநாடு தனியூர் வாணியத்தெருவில் உள்ள ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் கோயிலில் 67-வது ஆண்டு சிறுத்தொண்டர் அமுது படையல் விழா நடைபெற்றது. குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இக்கோயிலில் சித்திரை மாத அமாவாசை தினத்தில் வழங்கப்படும் சீராளன் அருள்பிரசாதம் பெற்று உண்டால் குழந்தைப்பேறு உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. விழாவையொட்டி இரவு சீராளனை முத்துப்பல்லக்கில் அலங்கரித்து வீதியுலா நடைபெற்றது. பின்னர் சிறுத்தொண்டர் வரலாறு நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய விழாவான சீராளன் பிரசாதம் அளித்தல் அதிகாலை 4 மணிக்கு நடைபெற்றது. இதையொட்டி, வீதியுலாவாக கொண்டுவரப்பட்ட, 5 வகை மாவினால் உருவாக்கப்பட்ட சீராளன் உருவத்தை கோயிலுக்கு எடுத்துவந்து, அதனை வெட்டி சமைத்து இறைவனுக்கு படைத்தனர். அதனை, ஏராளமான பக்தர்களும், குழந்தைபேறு வேண்டி இளம்பெண்கள் பலரும் வாங்கி உண்டனர். விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தேனி: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் நடந்த ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar