பதிவு செய்த நாள்
03
மே
2022
06:05
மேட்டுப்பாளையம்: மகாமக பவானி அம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நடந்தது.
மேட்டுப்பாளையம் ஓடந்துறை பவானி ஆற்றின் கரையில், மகாமக பவானி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் குண்டம் விழா, கடந்த மாதம், 19ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 26ம் தேதி குஞ்சப்பனை மகா மாரியம்மன் கோவிலில் இருந்து, அக்னி கம்பம் எடுத்து வந்து நடப்பட்டது. 29ம் தேதி மதுரை வீரன் தட்டி எடுத்தலும், திருவிளக்கு பூஜையும் நடந்தது. நேற்று கோத்தகிரி ரோட்டில் உள்ள முனியப்பன் கோவிலில் இருந்து, பூச்சட்டி கரகம் பவானி அம்மன் கோவிலுக்கு அழைத்து வந்தனர். இன்று காலை நெல்லிதுறை ரோட்டில் உள்ள வீரமாஸ்தி அம்மன் கோவிலில் இருந்து, அலங்காரம் செய்த அம்மன் சுவாமியை, பவானி அம்மன் கோவிலுக்கு அழைத்து வந்தனர். பின்பு கோவிலில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு பூஜை செய்த தலைமை பூசாரி ராஜேந்திரன் முதலில் குண்டம் இறங்கினார். கரகம் எடுத்து வந்த ரவி, பூபதி, சுப்பிரமணி இவர்களைத் தொடர்ந்து, நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர்.