பதிவு செய்த நாள்
03
மே
2022
07:05
போத்தனூர்: குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 2 பகுதியிலுள்ள தர்மசாஸ்தா கோவிலின், 34ம் ஆண்டு விழா நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு அலங்கார தரிசனத்துடன் துவங்கியது. தொடர்ந்து, ஆச்சார்ய லரணம், பிரசாத சுத்தி, ஆலய சுத்தி, வாஸ்து ஹோமம், வாஸ்து பலி ஆகியவை நடந்தன. மாலையில், அத்தாழ பூஜை, தீபாராதனை, பிரசார வினியோகம், ஹரிவராசனமும் நடந்தன.
இன்று அதிகாலை, நிர்மால்ய தரிசனம், மகாகணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், உஷபூஜை தீபாராதனை ஆகியவை நடக்கின்றன. தொடர்ந்து பிம்ப சுத்தி, கலச பூஜை. சாந்தி ஹோமம், 108 கலசாபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, உச்சிகால பூஜை, இரவு ஹரிலராசனம், பிரசாத வினியோகம் ஆகியவை நடக்கின்றன. நாளை அதிகாலை முதல் இரவு வரை நிர்மால்ய தரிசனம் சிறப்பு அபிஷேகம் தீபாராதனை, அலங்கார தரிசனம், பூதபலி ஆகியவை நடக்கின்றன, 5ம் தேதி நிர்மால்ய தரிசனம், சுசிர்த ஹோமம், மகா விஷ்ணு, அம்பாள் சிறப்பு அபிஷேக பூஜைகள், பறையெடுப்பு, உற்சவ பலி உள்ளிட்டவை நடக்கின்றன. 6ம் தேதி நிர்மால்ய தரிசனம், அபிஷேகம், 108 கலசாபிஷேகம் உள்ளிட்டவையும் நிறைவு நாளான, 7ம் தேதி, பள்ளி குறுப்பு உணர்த்துதல், முளை எடுத்தல், சத்ரு சம்ஹார பூஜை, நவகம், பஞ்சகவ்யம், அன்னானம், தீபாராதனை, அத்தாழ பூஜை, சிறப்பு பறையெடுப்பு, ஆறாட்டு ஜோதி தரிசனம், கொடி இறக்கம் உள்ளிட்டவை நடக்கின்றன. ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்துள்ளனர்.