பேரையூர்: டி.கல்லுப்பட்டியில் 300 ஆண்டு பழமை வாய்ந்த புது மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். பக்தர்கள் மாறுவேடங்களில் ஆடிப்பாடி மகிழ்ந்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேவலோக கடவுள்கள்,பழங்கால அரசர்கள், ராட்சதர்கள், பேய்,பிசாசுகள், பிச்சைக்காரர்கள் மற்றும் பெண்கள் போன்று வேடமிட்டு அலங்கார வண்டியில் ஊர்வலமாக வந்து கோயிலை அடைந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.