ராமநாதபுரம் : மாத கார்த்திகையை முன்னிட்டு, ராமநாதபுரம் பகுதியில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம் நடந்தது.நேற்று சித்திரை கார்த்திகையை முன்னிட்டு, ராமநாதபுரம் குண்டுக்கரைசுவாமிநாத சுவாமி கோயில் காலை, மாலை பூஜைகளில் பால், தயிர், பழங்களால் அபிேஷகம் நடந்தது. பட்டணம்காத்தான் சேதுபதிநகர் கலெக்டர் அலுவலகம் அருகே வினைதீர்க்கும் வேலவர் கோயிலில் அபிேஷகம், அன்னதானம் நடந்தது. ராமநாதபுரம் வழிவிடுமுருகன்கோயில், குமாரய்யா கோயில், வெளிப்பட்டனம் பாலசுப்பிரமணிய சுவாமி, சிறப்பு பூஜையில் பக்தர்கள் பங்கேற்றனர்.