சூலூர்: சூலூர் அத்தனூர் அம்மன் கோவில், திருவிழா, சாமி சாட்டுதலுடன் துவங்கியது.
சூலூரில் உள்ள அத்தனூர் அம்மன் கோவில், 1,400 ஆண்டுகள் பழமையானது. இங்கு, 29 ம் ஆண்டு வைகாசி திருக்கல்யாண திருவிழா, சாமி சாட்டுதலுடன் நேற்று துவங்கியது. மே 10 ந்தேதி அக்னி கம்பம் நடுதலும், மே 17 ந்தேதி பண்டார வேஷமும், அம்மை அழைத்தலும் நடக்கிறது. மே 18 ந்தேதி காலை, 9:00 மணிக்கு, நொய்யல் ஆற்றில் இருந்து தீர்த்தம் மற்றும் பால் குட ஊர்வலம் நடக்கிறது. மாலை மாவிளக்கு மற்றும் திருக்கல்யாண அலங்கார பூஜைகள் நடக்கிறது. மே 21 ம்தேதி ஊர் அபிஷேகமும், மே 24 ம்தேதி மகா முனி மற்றும் சங்கிலி கருப்பராயனுக்கு படையல் பூஜை நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.