Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தருமபுரம் ஆதினத்துக்கு தடையா? தமிழ் ... சூலூர் அத்தனூர் அம்மன் கோவில் திருவிழா துவக்கியது சூலூர் அத்தனூர் அம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவிலில் 1008 பால்குடம் ஊர்வலம்
எழுத்தின் அளவு:
கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவிலில் 1008 பால்குடம் ஊர்வலம்

பதிவு செய்த நாள்

04 மே
2022
08:05

செஞ்சி: கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவிலில் 1008 பால் குடம் ஊர்வலம் நடந்தது.

செஞ்சி தாலுகா கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன், செல்வ விநாயகர், ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் 22 ஆம் ஆண்டு பிரம்மோற்சவம், 13 ஆண்டு தேர்திருவிழா கடந்த 2ம் தேதி துவங்கியது. அன்று காலை 7 மணிக்கு வினாயகர் பூஜை, அனுக்ஜை, கணபதி ஹோமமும், கொடியேற்றமும் நடந்தது. 8.30 மணிக்கு செல்லியம்மன் பூங்கரகம் ஜோடித்து அழைத்து வருதல், தொடர்ந்து சாகை வார்த்தல் நடந்தது. மாலை 7 மணிக்கு நவசந்தி காப்பும், பூங்கரகம், அம்மச்சார் அம்மன் வீதி உலா நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு அம்மச்சார் அம்மன் கோவிலில் இருந்து பத்மினி தேவி மூர்த்தி தலைமையில் 1008 பால் குடங்களை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வந்தனர். பகல் 11 மணிக்கு செல்வ விநாயகர், அம்மச்சார் அம்மன், சீனுவாச பெருமாளுக்கு பால்குட அபிஷேக, தொடர்ந்து அம்மச்சார் அம்மனுக்கும் பாலாபிஷேகமும், இரவு சாமி வீதி உலா நடந்தது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க செயலாளர் கிருஷ்ணதாஸ், ஊராட்சி தலைவர் முருகன், விழாக்குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு தொடர் அன்னதானம் நடந்தது. இன்று (4ம் தேதி, மாலை 5 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவமும், 6ம் தேதி மாலை திருவிளக்கு பூஜையும், 8ம் தேதி காலை 8.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடக்க உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பங்குனி உத்திரம் உத்சவத்தை முன்னிட்டு, நிலமங்கை ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவை ஒட்டி, இன்று அதிகாரநந்தி சேவை நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் திருக்கோயில் பங்குனி உத்திரம் இலட்சார்ச்சனை தெப்பத் திருவிழா வரும் 29ம் தேதி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : கணபதி அக்ரஹாரத்தில் கோலாகலமாக நடந்த பிரம்ம நாகரேச்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar