Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அறநிலையத் துறை சார்பில் 165 அறிவிப்பு : ... ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜர் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமங்கலம் அருகே பாண்டியர் கால கிரந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
திருமங்கலம் அருகே பாண்டியர் கால கிரந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

05 மே
2022
09:05

திருமங்கலம்: மதுரை மாவட்டம் திருமங்கலம் உச்சப்பட்டியில் 1200 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கால கிரந்தம் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது

உச்சப்பட்டியை சேர்ந்த சூரிய பிரகாஷ் தகவலின்படி மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியின் முதுகலை வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் முனீஸ்வரன் தலைமையில் பேராசிரியர் லட்சுமண மூர்த்தி ஆகியோர் கொண்ட குழுவினர் மேற்பரப்பு கள ஆய்வு செய்த போது சூலாயுதம் பொறிக்கப்பட்டு கிரந்த எழுத்துகளுடன் இருந்த கல்வெட்டு கண்டறியப்பட்டது. இக்கல்வெட்டை மை படி எடுத்து ஆய்வு செய்த போது பொ.ஆ 9 ம் நூற்றாண்டை சேர்ந்தவை என்று அறியலாம் . இது குறித்து உதவிப் பேராசிரியர் முனைவர் முனீஸ்வரன் கூறியதாவது : பாண்டியர் ஆட்சி காலத்தில் வழிபாட்டுத் தலங்களில் தினசரி வழிபாடு செய்வதற்கு நந்த தீபம் ஏற்றுவதற்கு, சமய சொற்பொழிவுகள் நிகழ்த்துவதற்கு, கோவில் பராமரிப்பு: . களுக்கும். மன்னர் பல ஏக்கர் நஞ்சை புஞ்சை நிலங்கள் மீது வரியை நீக்கி கோவில்களுக்கு (இறையிலி) தானமாக கொடுக்கப்பட்டது.இந்த நிலத்திலிருந்து கிடைக்கும் வருவாய்!" கோவில் பராமரிக்கப்பட்டது .இவற்றை தேவதானம் என்று அழைக்கப்படுவார். தேவதானம் வழங்கப்படும் நிலங்களை அடையாளப்படுத்தும் வகையில் நான்கு மூலைகளில் எல்லைக்கல் நட்டு வைப்பது வழக்கம்.குறிப்பாக சிவன் கோவிலுக்கு வழங்கப்பட்ட நிலகானம் (திரிசூல குறியீடு திருநாமத்துக்காணி என்றும், பெருமாள் கோவிலுக்கு வழங்கும் நில தானம் ( சங்கு, சக்கரம் குறியீடு) திருவிடையாட்டம் என்றும். சமண கோவிலுக்கு வழங்கும் நில தானம் முக்குடை குறியீடு) பள்ளி சந்தம் என அழைக்கப்படும்.

கல்வெட்டு‌ செய்தி : உச்சப்பட்டியில் மருத காளியம்மன் கோவில் அருகே கண்டறியப்பட்ட தனித்தூண் கல்லில் 5 அடி நீளம் 1 அடி அகலம் 3 வரி கிரந்தம் எழுத்துகளுடன் பொறிக்கப்பட்டு இருந்தன. கல்தூணின் கீழ் பகுதியில் சிவன் கோவிலுக்கு நில தானம் வழங்கியதற்காக திரிசூலம் கோட்டுருவம், செதுக்கப்பட்டுள்ளது.இக்கல்வெட்டின் எழுத்துக்கள் அதிக தேய்மானம் ஏற்பட்டதால் ஓய்வு பெற்ற கல்வெட்டு ஆய்வாளர் முனைவர் சாந்தலிங்கம் அவர்களின் உதவியுடன் படிக்கப்பட்டது. இக்கல்வெட்டில் அவனி ஸ்ரீமாறன் மடை, தம்மம். அவந்தி, வேந்தன் என தொடச்சியற்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டு ஸ்ரீ மாறன் ஸ்ரீ வல்லபன் ஆட்சி காலம் ( பொ.ஆ 835 முதல் 862) பொறிக்கப்பட்டு இருக்கலாம் என்றும், கல்வெட்டின் எழுத்தமைதி பொறுத்து அதன் காலம் பொ.ஆ 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். சமீபத்தில் இப்பகுதியில் பொ.ஆ.15ம் நூற்றாண்டைச் சேர்ந்த குதிரை வீரன் சிற்பம். விஜயநகர சின்னம் வராகன் கோட்டுருவம் கண்டறியப்பட்டது மற்றொரு சிறப்பு என்றார் .

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; ஐப்பசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத அம்மாவாசை தீர்த்தவாரி ... மேலும்
 
temple news
கோவை; மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென்திருமலை ஸ்ரீ வாரி ஆலயத்தில் நடந்த வைபவத்தில் அதிகாலையில் ... மேலும்
 
temple news
சிவகங்கை; மா‌னாமதுரை வட்டம் கட்டிக்குளம், ஸ்ரீ சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகள் கோயிலில் அமாவாசையை ... மேலும்
 
temple news
கோவை; கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் ஐப்பசி மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு ஏராளமான மக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar