பெரியகுளம்: அக்னி நட்சத்திரம் தோன்றியதை ஒட்டி காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் தாராபிஷேகம் துவங்கியது.
கத்திரி வெயில் என்ற அக்னி நட்சத்திரம் மே 4ல் துவங்கியது. மே 28 வரை இருக்கும். இக்காலத்தில் சிவன் கோயில்களில் தாராபிஷேகம் நடத்துவது வழக்கம். பன்னீர், விலாமிச்சை வேர், பச்சைகற்பூரம், வெட்டிவேர், ஏலக்காய்,ஜவ்வாது, சந்தனம் போன்ற வாசனை திரவியங்களை தாரா பாத்திரத்தில் ஊற்றி, மூலவர் காளஹஸ்தீஸ்வரர் லிங்கம் மீது சொட்டு சொட்டாக விழும் முடிவு செய்வதுதான் தாராபிஷேகம். தினமும் காலை 11 மணிக்கு துவங்கி மாலை 7 மணி வரை நடைபெறும். கோடையின் தாக்கம் குறைந்து பெரியகுளம் பகுதிகளில் மழை பெய்ய வேண்டி தாராபிஷேகம் நடத்தப்படுகிறது என அர்ச்சகர் ஸ்ரீராம் தெரிவித்தார்.