காரைக்கால்: காரைக்கால் திருநள்ளார் சனிஸ்வரபவான் கோவிலில் பிரமோற்சவ விழா முன்னிட்டு தேர்க்கால் முகூர்த்தம் நடைபெற்றது.
காரைக்கால் திருநள்ளாரில் உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது.இக்கோவிலில் சனீஸ்வரன் பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.இதனால் நாட்டில் பல்வேறு பகுதியிலிருந்து பல்லாயிரக் காணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர். இக்கோவிலில் ஆண்டு தோறும் பிரமோற்சவம் விழா சிறப்பாக நடைபெறும் இந்தாண்டு பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கடந்த 29ம் தேதி பந்தல்கள் முகூர்த்தம் நடைபெற்றது. பிரமோற்சவ முக்கிய நிகழ்ச்சியான தேர்திருவிழாவை முன்னிட்டு இன்று தேர்க்கால் முகூர்த்தம் நடைபெற்றது. முன்னதாக தேர்களுக்கான கால்கள் மற்றும் கொடி மரத்து விநாயகருக்கு திரவியப்பொடி,மஞ்சள்,பால்,சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் அதனை தொடர்ந்து புனிதநீர் கொண்டு அபிஷேகமும்நடைபெற்றது. அதனை தொடர்ந்து தேர்க்கால் மற்றும் கொடிமரத்து விநாயகருக்கு பூஜைகளுடன் மகா தீபாரதனை சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன்,கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.