திருப்புல்லாணி பட்டாபிஷேக ராமருக்கு சைத்ரோத்ஸவ உற்ஸவ விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மே 2022 06:05
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் சித்திரை மாத சைத்ரோத்ஸவ விழா வருகிற மே 7., அன்று காலை 10:30 மணி அளவில் கொடியேற்றத்துடன் விழா துவங்க உள்ளது.
இங்குள்ள பட்டாபிஷேக ராமருக்கு சைத்ரோத்ஸவத்தை முன்னிட்டு இன்று இரவு 7 மணிக்கு அனுக்ஞை பூஜையுடன் விழா துவங்குகிறது. தொடர்ந்து மே 18ஆம் தேதி வரை காலை மற்றும் இரவு வேளைகளில் பல்லக்கு, அனுமார் வாகனம், சேஷ வாகனம், ஹம்ச வாகனம், கருட வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சேவை சாதிக்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. வருகிற மே 15 (ஞாயிறு) அன்று காலை 9 மணிக்கு மேல் பெரிய தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை சமஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், சரக அலுவலர் கிரிதரன், பேஸ்கர் கண்ணன் ஆகியோர் செய்து வருகின்றனர்.