காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, சந்தவெளி அம்மன் கோவில், சித்திரை திருவிழாவின் முதல் நாளில், சந்தவெளி அம்மன், பெரியபாளையத்து அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெருவில் உள்ள சந்தவெளி அம்மன் கோவிலில், நான்கு நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. விழாவையொட்டி, மதியம் 12:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது.மாலை 6:30 மணிக்கு சந்தவெளியம்மன் பெரிய பாளையத்து அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர். மூன்றாம் நாள் விழாவான இன்று மாலை 6:00 மணிக்கு பர்வதவர்த்தினி அம்மன் அலங்காரம் நடைபெறுகிறது.