பதிவு செய்த நாள்
07
மே
2022
11:05
அச்சிறுப்பாக்கம்: அச்சிறுப்பாக்கம் இளங்கிளிஅம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவிலில், சித்திரை மூன்றாம் நாளான நேற்று, அதிகார நந்தி சேவை நடந்தது.
அச்சிறுப்பாக்கத்தில் இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா, 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் மூன்றாவது நாளான நேற்று காலை , இளங்கிளி அம்மனும், ஆட்சீஸ்வரரும், பெ ரிய அதிகார நந்தியில் எழுந்தருளி, கோபுர தரிசனத்தில் அருள் பாலித்தனர். கோபுரத்திற்கு வெளியே கூடியிருந்த பக்தர்கள், சுவாமியையும், அம்மனையும் தரிசனம் செய்தனர். மேலும் உற்சவமூர்த்திகளான 63 நாயன்மார்களுக்கு, சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகளும் நடந்தன; 63 நாயன்மார்கள் வீதி உலா நடந்தது. தொடர்ந்து, அச்சிறுப்பாக்கம் பஜார் வீதியில் உள்ள சங்கு தீர்த்த குளக்கரை பகுதியில் ஞானசம்பந்தருக்கு அம்பாள் பால்புகட்டும் நிகழ்வாக, திருமுலைப்பால் உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.