பதிவு செய்த நாள்
07
மே
2022
12:05
பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையத்தில் ராஜகணபதி கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
நரசிம்மநாயக்கன்பாளையம் ராஜகணபதி ஆலய வளாகத்தில் பாலசுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், விஷ்ணு துர்க்கை, லலிதாம்பிகை, நவகிரக நாயகர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். விழாவையொட்டி, வியாழக்கிழமை மங்கள இசை, திருவிளக்கு ஏற்றுதல், விக்னேஸ்வர பூஜை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, திருக்கோயிலுக்கு முளைப்பாரி மற்றும் கலச தீர்த்தம் எடுத்து வருதல், மாலை புனித மண் எடுத்தல், காப்பு கட்டுதல், யாகசாலை பிரவேசம் நடந்தது. இரவு மூத்த பிள்ளையாருக்கு முதல் கால யாக பூஜைகள் துவங்கின. இரவு படுகர் நடன நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, எண் வகை மருந்து சாற்றுதல், விமான கலசங்கள் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, 8:00 மணிக்கு ராஜ கணபதி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தரிசனம், மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் தொடர்ந்து அன்னதானம் நடந்தது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.