திருவாலங்காடு: ஜாத்திரை திருவிழாவை ஒட்டி, திருவாலங்காடு மந்தவெளியம்மனுக்கு, பால்குடம் எடுத்து, பெண்கள் வழிபட்டனர். திருவாலங்காடு அம்பேத்கர் நகரில் மந்தவெளியம்மன் கோவில் உள்ளது. இந்த அம்மனுக்கு, ஆண்டுதோறும் மே மாதம் முதல் வாரத்தில், மூன்று நாள் ஜாத்திரை திருவிழா நடப்பது வழக்கம்.கொரோனா தொற்று பரவல் காரணமாக, இரண்டு ஆண்டுகளாக ஜாத்திரை விழா நடக்கவில்லை. இந்நிலையில் ஜாத்திரை விழா நேற்று துவங்கியது.முதல் நாளில் பெண் பக்தர்கள் 150 பேர் பால் குடம் ஏந்தி, அம்பேத்கர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, அம்மனுக்கு பூஜை செய்து வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.