* குடும்பத்தினரிடம் இருந்து தொடங்கும் தர்மமே உயர்ந்தது. * நீங்கள் செய்யும் பாவமே உங்களை களங்கப்படுத்துகிறது. * புறம் பேசாதீர்கள். மீறி பேசினால் இறைவன் உங்களை மன்னிக்க மாட்டான். * நற்பண்புகள் கொண்ட பெண்ணை காட்டிலும் உயர்ந்தவர் யாருமில்லை. * விலங்குகளை ஒருபோதும் சித்திரவதை செய்யாதீர்கள். * பணியாளர்களை உங்களுக்கு அருகில் அமர வைத்து உண்ணுங்கள். * பிறப்பால் அனைவரும் துாய்மையானவர்கள். * அனைவரிடமும் பாரபட்சம் இல்லாமல் அன்பு காட்டுங்கள். * சொந்தத்தில் ஒழுக்கமான பெண் ஏழையாக இருந்தாலும் அவளை திருமணம் செய்யுங்கள். * மவுனமாக இருக்கும் வரை நாக்கின் கற்பு பாதுகாக்கப்படும். * பெண்களை கண்ணியமாக நடத்துங்கள். * நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதையே பிறருக்கும் செய்யுங்கள். * எவ்வளவு நேரம் மவுனமாக இருக்கிறீர்களோ, அவ்வளவு புண்ணியம் உங்களைச் சேரும். * நல்ல செயல்களை செய்யும்போது போது எத்தனை துன்பம் வந்தாலும் பொறுத்துக் கொள்ளுங்கள். – பொன்மொழிகள்