மனிதன் வாழ்நாள் முழுவதும் செலவழித்தாலும், வேதத்தை அறிந்து கொள்ள முடியாது. இதை உணர்ந்த வியாசர் அதை ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என நான்காகப் பிரித்தார். வேதம் என்ற சொல்லுக்கு அறிவுக்கு ஆதாரமானஇருப்பிடம் என்று பொருள். வியாசர் தன் சீடர்களான பைலரிடம் ரிக் வேதத்தையும், வைசம்பாயனரிடம் யஜுர் வேதத்தையும், ஜைமினியிடம் சாம வேதத்தையும்,ஸுமந்துவிடம் அதர்வண வேதத்தையும் கொடுத்து மக்கள் மத்தியில் பரப்பும்படி உத்தரவிட்டார்.இதில் ரிக் வேதம் ஸ்தோத்திரம் அடங்கிய வழிபாட்டு பாடல்களைக் கொண்டது. யஜுர் வேதம் யாகம் நடத்தும் முறைகளை விவரிக்கிறது. சாமவேதம் இசையோடு பாடும் பாடல்கள் நிறைந்தது. அதர்வண வேதத்தில் ஆபத்து, எதிரி தொல்லைகளைப் போக்கும் மாந்திரீக முறைகள் உள்ளன.