பதிவு செய்த நாள்
09
மே
2022
12:05
நாகப்பட்டினம்: நாகையில், பிரசித்திப் பெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் செடில் உற்சவத்தை முன்னிட்டு நடந்த திருத்தேர் வீதியுலாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
நாகையில் உள்ள பிரசித்திப் பெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலில் பிர்மோத்சவ விழா, கடந்த 29 ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நாள்தோறும் அம்பாள் அம்ச, மயில், பூத, சேஷ, சிம்ம, யானை, குதிரை வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். முக்கிய நிகழ்ச்சியாக நேற்று அதிகாலை அம்பாள் தேரில் எழுந்தருளினார்.தேரில் எழுந்தருளிய அம்பாள், முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து செடில் உற்சவம் நடந்தது. செடில் உற்சவத்தை முன்னிட்டு, கோவிலில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. செடில் மற்றும் திருத்தேர் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.