காரைக்கால் தங்க மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூலை 2012 10:07
காரைக்கால்: காரைக்கால் தலத்தெரு தங்க மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. காரைக்கால் தலத்தெரு தங்க மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் மகாலட்சுமி திருவிளக்கு பூஜை நடந்தது. மாலை 6 மணிக்கு துவங்கிய பூஜையில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்தனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.