கொண்டத்து காளியம்மன் கோவிலில் 24.26 லட்ச ரூபாய் காணிக்கை வசூல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மே 2022 04:05
அனுப்பர்பாளையம் : பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் 24.26 லட்ச ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.
திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோயில் உள்ளது. கோவிலில் இரண்டு உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. அறநிலையத்துறை மாவட்ட உதவி ஆணையர் செல்வராஜ், ஊத்துக்குளி ஆய்வாளர் ஆதிரை, கோவில் செயல் அலுவலர் ராஜா, ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. காணிக்கை எண்ணும் பணியில் திருப்பூர், மகாவிஷ்ணு சேவா சங்க நிர்வாகிகள் மற்றும் அங்குள்ள தனியார் பள்ளி மாணவர்கள் ஈடுபட்டனர். இதில், 24 லட்சத்து, 26 ஆயிரத்து, 827 ரூபாய், 162 கிராம் 600 மில்லி கிராம் தங்கம், 195 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.