திருக்கோவிலூர்: மதுரைவீரன் கோவில் ஆடித் திருவிழாவில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. திருக்கோவிலூர், மந்தக்கரை வீதி மதுரைவீரன் கோவில் ஆடித் திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. 2ம் நாளான நேற்று வீரனுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இன்று காலை தென்பெண்ணை ஆற்றிலிருந்து சக்தி கரகம் புறப்பட்டு ஊர்வலமாக வந்து கோவிலை அடைகிறது. 30ம் தேதி பொம்மி சிறையெடுத்தலும், 31ம் தேதி கள்வரை கருவறுத்து வெள்ளையம்மாளை சிறையெடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.