பதிவு செய்த நாள்
30
ஜூலை
2012
10:07
மோகனூர்: ராஜநாகலட்சுமி அம்மன் கோவிலில், ஆகஸ்ட் 3ம் தேதி, வளைகாப்பு திருவிழா, 16 அடி ராஜகுண்டலினி அம்மனின், 32ம் நாள் மண்டல பூஜை கோலாகலமாக நடக்கிறது. மோகனூர் யூனியன், ராசிபாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மாருதி நகரில், பிரசித்தி பெற்ற ராஜநாகலட்சுமி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் ஆடி வெள்ளிக்கிழமையன்று, ஸ்வாமிக்கு வளைகாப்பு திருவிழா, கோலாகலமாக கொண்டாப்படுவது வழக்கம்.இந்த ஆண்டு, 11ம் ஆண்டு வளைகாப்பு திருவிழா மற்றும், 16 அடி ராஜகுண்டலினி அம்மனின், 32ம் நாள் மண்டல சிறப்பு பூஜை, ஆகஸ்ட் 3ம் தேதி நடக்கிறது. விழாவை முன்னிட்டு, அன்று அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி துவங்குகிறது. 8 மணிக்கு அபிஷேகம், 10 மணிக்கு கோ, சுமங்கலி, கன்னிகா பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து, காலை 11 மணிக்கு, சீர்வரிசை வழங்கப்படுகிறது. பகல் 12 மணிக்கு வளைகாப்பு திருவிழா கோலாகலமாக நடக்கிறது. 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்யப்படுகிறது. பகல் 1 மணிக்கு, மகா தீபாராதனை நடக்கிறது.விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.