தென் திருப்பதியில் திருக்கல்யாண உற்சவம் : பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மே 2022 08:05
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே தென் திருப்பதி திருமலையில் உள்ள, வேங்கடேஸ்வர வாரி பிரார்த்தனை கூடத்தில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
கோவிலில் பத்மாவதி சீனிவாச பரிணய உற்சவம் நிகழ்ச்சிகள் மூன்று நாட்கள் நடந்தன. முதல் நாள் மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி, திருவீதி உலா வந்தார். அதைத்தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி சப்பரத்தில் புறப்பாடு நடந்தது. மூன்றாவது நாளான நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து திருக்கல்யாண உற்சவ வைபவம் துவங்கியது. அர்ச்சகர்கள், ஸ்ரீ தேவி, பூதேவிக்கு மாங்கல்யம் அணிவித்தனர். அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த வைபவ நிகழ்ச்சிகள் கே.ஜி., குரூப் சேர்மன் பாலகிருஷ்ணன், நிர்வாக இயக்குனர் ஸ்ரீ ராம், கண்ணபிரான் நிர்வாக இயக்குனர் ஸ்ரீஹரி, ஸ்ரீனிவாச கார்மெண்ட்ஸ் நிர்வாக இயக்குனர் பிரணவ் மற்றும் தொழிலாளர்கள் பக்தர்கள் பங்கேற்றனர்.