வீரபாண்டி கவுமாரியம்மன் சித்திரை திருவிழா; இன்று தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மே 2022 08:05
தேனி : வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் இன்று தேரோட்டம் நடக்கிறது.
வீரபாண்டியில் மே 10ல் துவங்கிய சித்திரை திருவிழா மே 17 வரை நடக்கிறது. 3ம் நாளான பல ஆயிரம் பக்தர்கள் முல்லை பெரியாற்றில் நீராடி அக்னிச்சட்டி, ஆயிரம் கண்பானை, சேறு பூசுதல், அலகு குத்தி ஊர்வலமாக கோயிலுக்கு சென்று பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவில் பூப்பல்லக்கில், மின் அலங்காரத்துடன் முக்கிய வீதிகள் வழியாக அம்மன் ஊர்வலம் நடக்கிறது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று டக்கிறது. காலை மண்டகப்படி பூஜைக்கு பின் அம்மன் தேரில் எழுந்தருளி, சக்தி கொடுக்கும் பூஜை நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர். இரவு சன்னதி தெருவில் தேருக்கு வெள்ளை வீசுதல், சிறப்பு பூஜை நடக்கிறது.