சிவகாசி: சிவகாசி ஐயப்பன் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட ஐயப்பன் ஆலய மகா கும்பாபிஷேகம் மே 15 ல் ஞாயிறு நடைபெற உள்ளது. நேற்று காலை 8:00 மணி முதல் கணபதி ஹோமம் ,மகாலட்சுமி ஹோமம் ,கோ பூஜை யாகசாலை பூஜை துவங்கி, தொடர்ந்து 4 நாட்கள் 4 கால பூஜை நடைபெறும். கும்பாபிஷேகம் அன்று மே 15 ல் பால்குடம், நெய் குடம் எடுத்து சிவகாசி நகர்வலம் சுற்றி வந்து குரு ஓரையில் அனைத்து விமானம், மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறும். மதியம் அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரவு சுவாமி சிவகாசி நகர்வலம் வந்து அனைத்து பக்தர்களுக்கும் அருள் பாவிக்க உள்ளார். ஏற்பாடுகளை சிவகாசி அருள்மிகு ஐயப்பன் சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.