பதிவு செய்த நாள்
14
மே
2022
09:05
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே பிச்சனார்கோட்டை, நோக்கன்கோட்டை, பெத்தார்தேவன்கோட்டை ஆகிய கிராமங்களுக்கு உட்பட்ட, பூர்ணகலா, புஷ்பகலா, சமேத வாளுடைய அய்யனார் கோவில் அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக பூர்வாங்கம், அனுக்ஞை, விக்னேஸ்வர,கணபதி பூஜை மற்றும் வாஸ்து சாந்தி பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து முதல் மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, நாடிசந்தானம், மஹா பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றன.
பின்பு யாகசாலையில், பூஜை செய்யப்பட்ட புனிதநீர், சிவாச்சாரியார்கள் முன்னிலையில், கோவில் கோபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, நேற்று காலை 9:55 மணிக்கு கோபுர கலசத்தில், புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பரிகார தெய்வங்களான, பாலகணபதி, பாலமுருகன், கருப்பணசுவாமி, காளியம்மன், சோணை கருப்பன், ராஜேஸ்வரி அம்மன் ஆகிய தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டன. விழாவில் அன்னதானம் நடைபெற்றது. தபதி தெய்வேந்திரன் உட்பட சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.