யாதகிரிகுட்டா நரசிம்ம கோயிலில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மே 2022 07:05
தெலுங்கானா: விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் யாதகிரிகுட்டா நரசிம்ம கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தார். சந்நிதியில் நரசிம்ம அவதார கட்ட பாராயணம், ந்ருசிம்ம பஞ்சரத்தினம் & கரவலம்ப ஸ்தோத்திரத்திறத்துடன் வழிபாடு நடைபெற்றது.
தெலுங்கானா மாநிலதில் புவனா யாததிரி மாவட்டதில் உள்ள யாதகிரிகுட்டா எனும் சிறு நகரதில் உள்ள சிறுகுன்றில் உள்ளது யாதகிரி நரசிம்மர் கோவில். இந்த கோவில் ஐதராபாத் இருந்து 52 கி.மீ துரத்தில் உள்ளது. விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் 12ம் தேதி வருகை தந்து, சன்னதியில் பிரார்த்தனை செய்தார். மிகவும் பழமையான சந்நிதி, பாரம்பரியமான ஷில்ப சாஸ்திர முறைப்படி, நான்கு கோபுரங்களுடன் சமீபத்தில் முழுமையாக புதுப்பிக்கப்பட்டது. பிரதான சன்னதிக்கு முன்னால் உள்ள மண்டபம் நரசிம்ம சுவாமியின் பல வடிவங்கள் மற்றும் பிற சிற்பங்களுடன் கம்பீரமாக உள்ளது. கோயிலில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை அர்ச்சகர்கள், தலைவர், செயல் அலுவலர் மற்றும் கோவில் நிர்வாகிகள் வரவேற்றனர். சுவாமிகள் அண்மையில் புனரமைக்கப்பட்ட சிவன் கோவிலுக்கும் வருகை தந்து சிறப்பு அபிஷேகம் செய்தார். இந்த விஜயத்தின் போது ஹைதராபாத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமிகள் சென்று வழிபட்டனர்.