கொடைக்கானலில் பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கிய அழகர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மே 2022 07:05
கொடைக்கானல் : கொடைக்கானல் பெரிய மாரியம்மன் கோயில் விழாவில் அத்தி வரதராஜ பெருமாள் முதன்முதலில் ஆற்றில் இறங்கிய வைபவம் நடந்தது. வழக்கமாக சித்திரைப் பௌர்ணமியில் மதுரை அழகர் ஆற்றில் இறங்குவது பிரசித்திபெற்ற நிகழ்வாகும்.
கொடைக்கானல் பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவின் நிகழ்வாக நடந்த ஸ்ரீ சங்கரலிங்கேஸ்வரர், ஸ்ரீ கோமதி அம்மன் திருக்கல்யாண வைபவம் நேற்று நடந்தது. இதையடுத்து இன்று அண்ணா சாலையில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆனந்தகிரி தெருக்களில் ஊர்வலமாக வந்து டோபிகானல் ஆற்றில் இறங்கிய வைபவம் நடந்தது. தொடர்ந்து சுவாமி பச்சை பட்டு உடுத்தி கொட்டும் மழையில் ஆற்றில் இறங்கிய பின் கோயிலைச் சென்றடைந்தார். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கொடைக்கானலில் முதன்முதலில் இவ்வாறு நடப்பதால் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் ஆர்வமுடன் இதை கண்டுகளித்தனர். முன்னதாக அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாகிகள் மற்றும் வேலப்பா பக்தசபை செய்திருந்தனர்.