திருவாவடுதுறை ஆதீனத்தில் எண்ணங்களின் சங்கமம் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மே 2022 08:05
மயிலாடுதுறை : திருவாவடுதுறை ஆதீனத்தில் 75 தொண்டும் உள்ளங்கள் பங்கேற்ற எண்ணங்களின் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவாவடுதுறையில் நாட்டின் 75வது சுதந்திர ஆண்டில் சுதந்திர இந்தியாவிற்கு செங்கோல் வழங்கி பெருமை சேர்த்த திருவாவடுதுறை ஆதின தலைமை திருமடத்தில் 75 தொண்டு உள்ளங்களில் எண்ணங்களின் சங்கமம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிகள் தஞ்சாவூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்தா பங்கேற்று கருத்துரை வழங்கினார், கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி சமஸ்தானம் ஸ்தாபகர் பிரம்ம ஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ் வாழ்த்துரை வழங்கினார். தமிழகத்தில் மக்களுக்கு மட்டுமன்றி பல்வேறு உயிரினங்களுக்கும் பெரும் தொண்டாற்றிய 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் பணமும், சான்றிதழையும் திருவாவடுதுறை ஆதீனம் 24 ஆவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் வழங்கினார் மீதமுள்ள 65 பேருக்கு விருதுகளை வழங்கி ஆசியுரை ஆற்றினார் இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சேவை உள்ளத்தினர் கலந்து கொண்டனர். முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களை பிரபாகர் வரவேற்றார், நிகழ்ச்சி ஏற்பாடுகளை ராமநாதன் செய்திருந்தார். நிறைவாக மணி நன்றி தெரிவித்தார்.