பதிவு செய்த நாள்
16
மே
2022
08:05
பெ.நா.பாளையம்: சின்னதடாகம் அருகே நஞ்சுண்டாபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத சுந்தரராஜ அழகர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
சின்னதடாகம் அருகே வரப்பாளையம், நஞ்சுண்டாபுரம் கிராமம் அழகர் நகரில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சுந்தரராஜ அழகர் பெருமாள் கோவில் கட்டப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தை யொட்டி, விக்கிரகங்கள் பட்டினப்பிரவேசம் நடந்தது. தொடர்ந்து, வாஸ்து சாந்தி, வேத பாராயணம், திவ்ய பிரபந்தம் தொடக்கம், சாற்றுமுறை நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்றுமுன்தினம் காலை, 7:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை வேதபாராயணம், மதியம், 2:00 மணிக்கு மேல் புதிய விக்ரகங்களுக்கு திருமஞ்சனம் நடந்தது. மாலை, வேத பாராயணம், ஹோமம், சாற்றுமுறை ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. நேற்று காலை, 6:00 மணி சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, 9:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. காலை, 11:00 மணிக்கு அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை வரப்பாளையம் அழகர் நகர் கோவில் நிர்வாக திருப்பணிக் குழுவினர் செய்து இருந்தனர். விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.