பதிவு செய்த நாள்
16
மே
2022
08:05
கூடலூர்: கூடலூர், பால்மேடு பாண்டியார் அரசு தேயிலை கோட்டம், சரகம் எண் 1எ ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவில், கும்பாபிஷேக திருவிழா 13ம் தேதி துவங்கியது. காலை 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, முகூர்த்தக்கால் நடுதல் மற்றும் கொடி ஏற்றும் நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று முன்தினம், மாலை இரும்புபாலம் ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டது. இரவு 8:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, சிறப்பு பூஜைகள், கணபதி ஹோமமும், மஹா பூர்ணாகுதி தீபாராதனை, கலச பிரதிஸ்டை நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று, காலை 5:00 மணி முதல் யாகசாலை பூஜைகள் நடந்தது. காலை 10:00 மணிக்கு கும்பாபிஷேகம் நிகழ்ச்சி விழா சிறப்பாக நடந்தது. ஏராளமான ப பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். விழாவில் பாண்டியார் கோட்ட மேலாளர் ஸ்ரீதரன், உதவி நடத்துநர் ஆறுமுகராஜா, நெல்லியாளம் நகராட்சி துணைத்தலைவர் நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.