அத்தியூத்து பகவதி அம்மன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மே 2022 06:05
தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே அத்தியூத்து பகவதி அம்மன் கோவிலில் வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு, 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து பரிகார தெய்வங்களான உதிரமுடைய அய்யனார், பூர்ண புஷ்கலா தேவி, முத்து விநாயகர் ,சுப்பிரமணியர், கருப்பணசுவாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கும், சிறப்பு பூஜை நடைபெற்றன. நடைபெற்ற சிறப்பு பூஜையில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.