ஆயிரம் காளியம்மன் கோவில் திருவிழா குறித்து கலெக்டர் ஆலோசனைக்கூட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மே 2022 04:05
காரைக்கால்; காரைக்காலில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆயிரம் காளியம்மன் கோவில் திருவிழா குறித்து கலெக்டர் வல்லவன் தலைமையில் அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
காரைக்கால் திருமலைராயன் பட்டினத்தில் உள்ள ஆயிரம் காளியம்மன் கோவிலில் ஐந்து ஆண்டிற்கு ஒருமுறை நடைபெற்று திருவிழா வரும் ஜூன் 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெருவதை முன்னிட்டு நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விழா ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் வல்லவன் தலைமையில் அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.இதில் தொகுதி எம்..எல்.ஏ., நாகதியாகராஜன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் கூடுதல் பார்க்கிங் வசதி,கோயிலைச் சுற்றி ஹெமாஸ் விளக்குகள் அமைத்தல், தடையின்றி 24மணி நேர குடிநீர் விநியோகம் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கூடுதல் பேருந்து இயக்குதல் மற்றும் மருத்துவ வசதி, ஆம்புலன்ஸ்,தீயணைப்பு வண்டி தயார் நிலையில் நிருத்துதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் கொம்யூன் பஞ்சாயத்தின் மூலம் உடனுக்குடன் குப்பைகளை அகற்றுவது, கூடுதல் கழிப்பறை அமைத்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.இக்கூட்டத்தில் சீனியர் எஸ்.பி., லோகேஸ்வரன்,எஸ்.பி.,சுப்ரமணியன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.