மதுரை: மதுரை அனுப்பானடி சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில் வெப்பு தோஷ நிவர்த்தி, கொரோனா நோய் தடுப்பிற்காக அமிர்த சஞ்ஜீவினி வழிபாடு நடத்தப்பட்டது. வழிபாட்டை சன்மார்க்க சேவகர் ராமநாதன் நடத்தினார். திருஞான சம்பந்தர் அருளிய திருநீற்று பதிகம், கோளாறு பதிகம், தன்வந்திரி கவசம், மருத்துஞ்சய மந்திர வழிபாடு, வள்ளலார் அருளிய மருந்து பதிகம் உள்ளிட்டவை வாசித்து வழிபாடு நடத்தப்பட்டது.