பதிவு செய்த நாள்
19
மே
2022
09:05
வாரணாசி வழக்கறிஞர் வேலை நிறுத்தம் காரணமாக ஞானவாபி மசூதி வழக்கில் நேற்று விசாரணை நடைபெறவில்லை. உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வாரணாசியில், புகழ்பெற்ற விஸ்வநாதர் கோவிலை ஒட்டி ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இதன் ஒரு வெளிப்புற சுவரில் உள்ள சிருங்கார கவுரி சிலையை வழிபட அனுமதி கோரி, ஹிந்து பெண்கள் சிலர் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதையடுத்து மசூதி வளாகத்தில் கள ஆய்வு செய்யவும், வீடியோ பதிவு செய்யவும், ஐந்து பேர் அடங்கிய குழுவை நீதிமன்றம் அமைத்தது.
இந்தக் குழுவினர், 16ல் தங்கள் ஆய்வை நிறைவு செய்தனர். அப்போது, மசூதி வளாகத்தில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், வாரணாசி நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நேற்று நடக்க இருந்தது. ஆனால், வழக்கறிஞர்கள் குறித்து மாநில சிறப்பு செயலர் தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, மாநிலம் முழுதும் நேற்று வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இதனால், வாரணாசி நீதிமன்றத்தில் நேற்று ஞானவாபி மசூதி வழக்கின் விசாரணை நடக்கவில்லை. இன்று விசாரணை நடக்கலாம் என கூறப்படுகிறது.