பதிவு செய்த நாள்
20
மே
2022
09:05
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் வைகாசி பிரமோற்சவத்தில் நேற்று தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரமோற்சவம் கடந்த, 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் மூன்றாம் நாள் கருடசேவை உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. ஏழாம் நாள் உற்சவமான தேர் திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. அதிகாலை 3:00 மணிக்கு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் கோவிலில் இருந்து புறப்பட்டார். 3:45 மணிக்கு தேரில் பெருமாள் எழுந்தருளினார். பின் பக்தர்கள் தரிசனம் நடைபெற்றது. காலை 5:55 மணிக்கு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் செல்லும் வழிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. தேர் திருவிழாவை காண அதிகாலையில் இருந்து பக்தர்கள் திரண்டனர். மக்கள் போக்கு வரத்துக்கு வசதியாக நகருக்கு வெளியில் தற்காலிக பேருந்துநிறுத்தம் அமைக்கப்பட்டது. காஞ்சிபுரத்தில் அனைத்து வழிகளிலும் வாகனங்கள் செல்வது நிறுத்தப்பட்டது.
தேர் திருவிழாவை காணவந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தேர் ராஜவீதியை சுற்றி இரட்டை மண்டபம் திரும்பி வரும் போது, பக்தர்கள் கூட்டம் அதிகமாககாணப்பட்டது. காலை 11:30 மணிக்கு தேர் நிலையை சென்றடைந்தது. தேரில் எழுந்தருளியுள்ள பெருமாளைபொது மக்கள் தரிசனத்திற்கு மாலை வரை அனுமதி வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு தேரில் இருந்து பெருமாள் இறங்கினார். அந்தப குதியில் மூன்று இடங்களில் பெருமாளுக்குமண்டப்படி நடந்தது. இதில், சாமிநாயக்கன் தோட்டம் மண்டபத்தில் எழுந்தருளிய வரதர் தேவியர்களுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. இரவு 9:00 மணிக்கு வரதராஜ பெருமாள் கோவிலை செ ன்று அடைந்தார். 4 குழந்தைகள் மீட்பு தேரோட்டத்தின் போது பக்தர்களின் கூட்டத்தில் பரிதவித்த, நான்கு குழந்தைகள் போலீசாரால் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.