கமுதி: கமுதி காமாட்சி அம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. மே 24ந் தேதி பொங்கல் விழாவும், மே 25ந் தேதி பால்குடம், பூச்சொரிதல் விழாவும்,மே 26ந் தேதி முளைப்பாரி ஊர்வலம் நடைபெற உள்ளது. இந்நிலையில் தினந்தோறும் காமாட்சி அம்மனுக்கு பால்,மஞ்சள், சந்தனம், திரவிய பொடிகள் உட்பட 21 வகையான அபிஷேகம் நடந்தது. பின்பு மூலவரான காமாட்சி அம்மன் தாண்டியார், கோலாட்டம் உட்பட அலங்காரத்தில் சிறப்புபூஜைகள் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை டிரஸ்டி கௌரவ செட்டியார்கள் உறவின்முறை மற்றும் இளைஞர்கள் நற்பணி மன்றம் சார்பில் செய்தனர்.