திருப்பதி : காய்கறி கொண்டு வரும், 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லாரியை, திருமலை ஏழுமலையானுக்கு, வியாபாரிகள் நன்கொடையாக வழங்கினர்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., மஞ்சுநாத் மற்றும் அதே பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட காய்கறி வியாபாரிகள் இணைந்து, 30 லட்சம் மதிப்புள்ள காய்கறிகள் கொண்டு செல்லும் லாரி ஒன்றை ஏழுமலையானுக்கு நன்கொடையாக வழங்கினர். நேற்று காலை ஏழுமலையான் கோவில் முன் லாரிக்கு பூஜைகள் செய்து, அதன் சாவியை தேவஸ்தான அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.